
நடிகர் விஷால், தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் வில்லனாக ஆர்யாவும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. லாக்டவுன் முடிந்து ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் உடனடியாக தொடங்கப்பட்டது இப்படத்தின் ஷூட்டிங். ஆந்திராவில் ராமோஹிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெறும் இப்பட ஷூட்டிங்கில் விஷால் கலந்துகொண்டுள்ளார்.
அதேபோல நடிகர் சோனு சூட், அவருடைய ஷூட்டிங் பணிக்காக அங்கு சென்றிருக்கிறார். அப்போது அவருடன் நிறைய பிரபலங்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடிகர் சரத்குமார் அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
தற்போது விஷால் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவுடன் குறிப்பிடுகையில், “எனது அன்பு சகோதரர், அற்புதமான ஆன்மா சோனு சூட்டை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் மனித இனத்துக்கு கடவுள் தந்த பரிசு. நீங்கள் செய்திருக்கும், தொடர்ந்து செய்து வரும் சமூக பணிகள் மூலம் எனக்கு ஊக்கம் அளித்துள்ளீர்கள். பரிச்சயம் இல்லாதவர்களின் குடும்பங்களுக்காகப் பலரும் இம்மாதிரியான முயற்சிகளைச் செய்ய மாட்டார்கள். நீங்கள் செய்த அத்தனை பணிகளையும் பற்றி கேள்விப்பட்டு வாயடைத்துப் போய்விட்டேன். தொடர்ந்து சிறப்பாக செயல்படுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
லாக்டவுனின்போது சிரமப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மற்றும் பலருக்கும் பல உதவிகளை செய்துவந்தார் சோனு சூட் என்பது குறிப்பிடத்தக்கது.