/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/455_19.jpg)
வீரமேவாகை சூடும் படத்திற்கு பிறகு நடிகர் விஷால், வினோத் குமார் இயக்கும் லத்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விஷால்இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடிக்கவுள்ளார். எனிமி பட தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்துவர்மா நடிக்க,வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார்.
ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து பொங்கல் பண்டிகைக்கு மார்க் ஆண்டனி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து 'துப்பறிவாளன் 2' படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)