Advertisment

பணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா? கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...

தமிழக நடிகரான விஷால், தமிழக நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ளார். தமிழ் சினிமாவில் விஷாலுக்கும், ஆர்யாவுக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்று டிபேட் வைக்கும் அளவிற்கு பேச்சலாராக இவ்விருவரும் வாழ்ந்துள்ளனர். ஒருமுறை நடிகர் சங்கக் கட்டிடம் முடிந்தபின் தான் எனக்கு திருமணம் என்று விஷால் சீரியஸாக ஒரு மேடையில் சொன்னார். தற்போது நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் பதியளவில் முடிவடைந்த நிலையில் விஷால் ஆந்திரா தொழிலதிபர் மற்றும் அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்த அனிஷாவை திருமணம் செய்துகொள்ள போவதாக கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு முடிவுகட்டும் வகையில், அனிஷா பொங்கல் தினத்தன்று விஷாலுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதை உறுதியாக்கினார்.

Advertisment

பின்னர், விஷாலும் இதுகுறித்து பேட்டியும் அளித்தார். இந்நிலையில், விஷால் பணத்திற்காகத்தான் அனிஷாவை திருமணம் செய்துகொள்கிறார் என்று சமூக வலைதளத்தில் ஒருவர் கமெண்ட் செய்ய, அதற்கு அனிஷா பதிலடி கொடுத்துள்ளார். விஷால் தன்னை பணத்திற்காக திருமணம் செய்துகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். பலர் அனிஷாவிடம் இதுக்கெல்லாம் பதில் சொல்லாதிங்க, ஃப்ரீயா விடுங்க என்று ஆதரவு சொல்கின்றனர்.

arjunreddy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe