நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்தபிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று விஷால் கூறியிருந்தார். தற்போது கட்டிட பணிகள் இறுதிகட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஷால் ஆந்திர நடிகை அனிஷா ரெட்டியை காதலிக்கிறார் என்கிற செய்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதனை அடுத்து அந்த செய்தியை உறுதி செய்தார் விஷால்.
இன்று ஹைதராபாத்தில் பிரபல தனியார் ஹோட்டலில் விஷால் அனிஷா நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது புகைப்படம் வெளியாகியுள்ளது.