Published on 26/11/2018 | Edited on 26/11/2018

நடிகர் விஷால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டின் ‘டெல்டா பகுதி’ முழுவதும் கஜா புயலால் பேரழிவை சந்தித்திருக்கிறது. அதில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், உள்ள கார்காவயல் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார் விஷால். இது தற்காலிகமாக இல்லாமல், முழுமையாக மறுசீரமைப்பு செய்து இந்தியாவிலேயே ‘சிறந்த கிராமமாக‘ மாற்றுவேன் என்றும் அந்த கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த கார்காவயல் கிராம மக்கள், எங்கள் கிராமத்தை தத்தெடுத்த விஷாலுக்கு எப்பொழுதும் நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று கூறியுள்ளனர்.