vishal about womens safety, small movie, gst

Advertisment

விஷால் கோயிலில் தான் வேண்டியது நிறைவேறிவிட்டதாக அடுத்தடுத்து இரண்டு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முதலில் சென்னை ஒரு கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற விஷால் சைக்கிலில் சென்றதால் அது பலரது கவனத்தை ஈர்த்தது. பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் கோயிலில் வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதை நிறைவேற்ற ஆரம்பித்துவிட்டேன். அதை சொல்லிவிட்டு போலாம் என்றுதான் வந்தேன்” என்றார்.

அப்போது அவரிடம் சிறு பட்ஜெட் படங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். திரும்பவும் சொல்கிறேன். ரூ.1 கோடியில் இருந்து ரூ.4 கோடி வரைக்கும் படம் எடுப்பதாக இருந்தால் படம் எடுக்காதீர்கள். அந்த பணத்தை உங்களின் குழந்தைகளின் பேரில் வைப்பு நிதியாக போடுங்கள். அல்லது நிலத்தை வாங்கிவிடுங்கள். ஓப்பனாக சொல்கிறேன் சினிமா துறை மோசமான நிலையில் இருக்கிறது. காசு இருக்கிறவர்கள் எல்லாரும் படம் எடுக்கலாம். விஜய் மல்லையா, அம்பானி எல்லாம் நிறைய பணம் வைத்துள்ளார்கள். அவர்கள் எல்லாம் ஏன் படம் எடுக்க வில்லை. அவர்களுக்கு சினிமா துறையைப் பற்றி தெரிந்திருக்கிறது. இதில் பணம் போட்டால் உறுதியாக பணம் திரும்ப கிடைக்கும் என்பது கிடையாது. குறிப்பாக சின்ன படங்களின் சேட்டிலைட், ஓ.டி.டி. கேள்வி குறியாக இருக்கிறது. அதை உணர்ந்துதான் நான் முன்பு சொன்னேன். ஆனால் அதை தவறாக புரிந்து கொண்டுவிட்டனர்.

கடந்த வாரம் 6 படங்கள் ரிலீஸானது. அதில் சில படங்கள் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் ஆடியன்ஸ் தியேட்டருக்கு வரவில்லை. சின்ன படங்களை தான் ஃபெப்சி தொழிலாளர்கள் நம்பி இருக்கிறார்கள். அதனால் சின்ன படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கவுன்சில் வழிகாட்ட வேண்டும்” என்றார். பின்பு அவரிடம் ஒரு செய்தியாளர், ‘மிஷ்கின் தனது ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை அடிமட்ட விலைக்கு வாங்கினார்கள் என்று கூறியிருக்கிறார். இது போன்ற பிரச்சனைகளுக்கு நடிகர் சங்கம் என்ன முடிவு எடுக்கப்போகிறது’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஷால், “நாங்கள் காவல் துறை கிடையாது. நாங்கள் நடிகர் சங்கம்” என்றார்.

Advertisment

vishal about womens safety, small movie, gst

பின்பு இன்னொரு கோயிலில் சாமி தரிசனம் செய்த விஷால் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் பெண்கள் பாதுகாப்பு குறித்தான கேள்விக்கு, “தற்காப்பு என்பது மிக முக்கியம். சில பொறுக்கிகள் யார் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். பள்ளி முடிந்து கல்லூரிக்கு செல்லும் முன்பே பெண்கள் தற்காப்புக்கலையை கற்றுத்தேர வேண்டும்” என்றார். பின்பு மத்திய பட்ஜெட்டில் சினிமா துறையின் எதிர்பார்ப்புக்கு பற்றிய கேள்விக்கு, “திரைத்துறையையும், சூதாட்டத்தையும் சேர்த்து ஜிஎஸ்டி வரி விதிக்கப்பவது வருத்தமாக இருக்கிறது. அதனை மத்திய பட்ஜெட்டில் ரத்து செய்ய வேண்டும். இந்தியாவிலேயே தமிழ் திரைத்துறைக்கு மட்டுமே இரட்டை வரி விதிக்கப்படுகிறது. 18 சதவீதம் ஜிஎஸ்டி, 8 சதவீதம் உள்ளாட்சி வரியும் விதிக்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் சினிமா துறைக்கு நல்லது அறிவித்தால் பஸ் பிடிச்சு வந்தாவது நிதியமைச்சருக்கு நன்றி சொல்வோம்” என பதிலளித்தார்.