Advertisment

சம்பாதித்த பணம் ஊழலுக்கு போவதா? - விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு

vishal about scam in cbfc mumbai office

விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இன்று முதல் இந்தியில் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், தணிக்கை வாரிய குழுவில் ஊழல் நடப்பதாக விஷால் பரபரப்பானஒரு குற்றச்சாட்டைவைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திரையில் ஊழலை காட்டுவது பரவாயில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் அதை ஜீரணிக்க முடியாது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் நடப்பது. மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய குழுவின் மும்பை அலுவலகத்தில் இன்னும் மோசமாகநடக்கிறது. எனது மார்க் ஆண்டனி இந்தி பதிப்பிற்கு 2 பரிவர்த்தனைகளாக 6.5 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது. திரையிடலுக்கு 3 லட்சம் மற்றும் சான்றிதழுக்கு 3.5 லட்சம்.

Advertisment

எனது கேரியரில் இந்த நிலையை சந்தித்ததில்லை. இன்று திரைப்படம் வெளியானதில் இருந்து சம்பந்தப்பட்ட மத்தியஸ்தர் மேனகாவுக்கு பணம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதை மகாராஷ்டிராவின் முதலமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதை செய்வது எனக்காக அல்ல எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக. நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போவதா? வாய்ப்பே இல்லை. எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

Bollywood actor vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe