Advertisment

“என்னுடைய நேரம் சீக்கிரம் வரும்”-விஷால் வருத்தம்

சண்டக்கோழி-2 படத்தை தொடர்ந்து விஷால் நடித்து வருகிற மே10ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘அயோக்யா’, இப்படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

Advertisment

vishal

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மேலும் இந்த படம் கடந்த மாதம்ஏப்ரல் 19ஆம் தேதி வெளிவர இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், விஷால் நிச்சயத்தார்த்தம் நிகழ்ச்சியால் படம் தள்ளிபோனது. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் மே 10ஆம் தேதி வெளி வரும் என்று படக்குழு அறிவித்திருந்தது. மே 7ஆம் தேதி இப்படம் சென்ஸாருக்கு அனுப்பப்பட்டு, U/A சான்றிதழ் இப்படத்திற்கு பெற்றது. இதன் பின்னும் இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லபப்ட்டது.

நேற்று (மே 9) வரை தீவிரமாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்த அயோக்யா இன்று (மே 10) காலை வெளியாகவில்லை. தயாரிப்பாளருக்கு பண நெருக்கடி காரணமாக வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. காலை 8 மணி காட்சிக்கு திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் படம் வெளியாகதது குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் ஒரு பதிவு ஒன்றை பதிவுட்டுள்ளார். அதில், “அயோக்யா' படத்துக்காக கடுமையாக உழைத்து, அதன் வெளியீட்டுக்காக காத்திருந்தேன். நடிகரைத் தாண்டி என்னால் இயன்ற அளவுக்கு என்ன பண்ண வேண்டுமோ பண்ணினேன். குழந்தை என் மடிக்கு வரும்போது அதை நன்றாகவே பார்த்துக்கொண்டேன். இது போதாதா? என்னுடை நேரம் சீக்கிரம் வரும். என்னுடைய பயணம் தொடரும்”என்றார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸின் துணை இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை லைட் ஹவுஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ayogya vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe