Advertisment

”அதற்காக பிச்சையெடுப்பதில் எங்களுக்கு கூச்சமில்லை” - நடிகர் விஷால் பேட்டி 

vishal

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் மூன்றாண்டுகள் கழித்து நீதிமன்ற உத்தரவுப்படி சமீபத்தில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட பாண்டவர் அணி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது.

Advertisment

அந்த நிகழ்வில் நடிகர் சங்க கட்டிடம் குறித்து பேசிய நடிகர் விஷால், “60 சதவிகித பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் நான்கு மாதங்கள் கூடுதலாக பதவியில் இருந்திருந்தால் மொத்த பணிகளையும் முடித்திருப்போம். கட்டப்பட்டு கொண்டிருக்கும் ஒரு கட்டிடம், இரண்டரை ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பித்தால் அதனுடைய பட்ஜெட் கூடுதலாகும். ஏற்கனவே போட்ட பட்ஜெட்டிலிருந்து 30 சதவிகிதம் அதிகரித்துவிட்டது. இன்னும் 20 கோடிக்கு மேல் தேவைப்படுகிறது. இனி கௌரவமாக பிச்சையெடுப்பதில் எங்களுக்கு கூச்சமில்லை. எல்லாம் இந்தக் கட்டிடத்திற்காகத்தான். இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துப்போவது குறித்து அனைவரும் அமர்ந்து ஆலோசனை நடத்த இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Advertisment

actor vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe