"சாதி ரீதியாக ஓட்டு போய்விடும் என்று நினைக்கக்கூடாது" - மணிப்பூர் விவகாரம் குறித்து விஷால்

vishal about manipur issue

இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் மறைந்த தினம் இன்று (27.7.2023). இதைமுன்னிட்டு அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் மரக்கன்றுகளை நட்டார். பின்பு மாணவ, மாணவிகளிடம் பேசிய அவர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசுகையில், "இலங்கையில் இசைப்பிரியா என்ற பெண்ணை ஆடையில்லாமல் அந்நாட்டு ராணுவ வீரர்கள் நடக்க விட்டார்கள். அந்தப் பெண் தொலைக்காட்சி தொகுப்பாளர். அதைத்தொலைக்காட்சியில் பார்க்கும் போது எனக்கு அசிங்கமாக இருந்தது. அவமானமாக இருந்தது. அப்படிப்பட்ட கொடுமைகள் இன்றும் பெண்களுக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் அரசுதான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தால் சாதி ரீதியாக ஓட்டு போய்விடும் என்று நினைக்காத ஒரு முதலமைச்சர் இருந்தால்தான் அதைத் தடுக்க முடியும். அந்தத்துறை சார்ந்த அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

actor vishal manipur
இதையும் படியுங்கள்
Subscribe