vishal

தமிழ் திரையுலகில் விஷாலுக்கும், ஆர்யாவுக்கும் திருமணம் நடைபெற போகிறது என்பதை யாராலும் நம்பவே முடியவில்லை. இவ்வளவு ஏன் ஆர்யா தன்னுடைய திருமண பத்திரிக்கையை கொடுத்ததை விஷாலே நம்ப முடியவில்லை என்று ட்வீட் செய்துள்ளார். நடிகர் ஆர்யாவுக்கும் நடிகை சயீஷாவுக்கு மார்ச் 8ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இதற்காக ஆர்யா தனது நண்பர்கள் அனைவரையும் சந்தித்து திருமண பத்திரிக்கையை கொடுத்து வருகிறார்.

Advertisment

இதுகுறித்து விஷால் ட்விட்டரில், “இது என் இதயத்துக்கு நெருக்கமாக அமைந்த புகைப்படம். என் நெருங்கிய நண்பன் ஆர்யாவின் திருமணப் பத்திரிகையைக் கையில் வைத்திருக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை. ஆர்யாவுக்கும் சயிஷாவுக்கும் வாழ்த்துகள்” என்று நெகிழ்ந்துள்ளார்.