Advertisment

“ஆக்‌ஷன் ஹீரோவாக என்னை உருவாக்கிய படம்” - விஷால் நெகிழ்ச்சி

vishal about 18 years of sandakozhi

Advertisment

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் சண்டக்கோழி. விக்ரம் கிருஷ்ணா தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்களைத்தாண்டி படத்தின் பிண்ணனி இசை இன்றளவும் பேசப்படுகிறது. மேலும் விஷால் கரியரில் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இப்படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் கடக்கிறது. இதை முன்னிட்டு விஷால் அவரது எக்ஸ் பக்கத்தில், “18 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 16, 2005 அன்று வெள்ளித்திரையில் சண்டக்கோழி என்ற மாயாஜாலத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக என் வாழ்க்கையை உருவாக்கிய இந்த நாளில் நான் அனுபவிக்கும் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

என்னை நம்பிய என் பெற்றோர், என் இயக்குநர் லிங்கு (சாமி), அவர்களின் வரிசையில் மேலே உள்ள கடவுளுக்கும் (சாமி) நான் வணங்கி நன்றி கூறுகிறேன். இறுதியாக உலகளவில் பார்வையாளர்கள் வடிவில் திரையரங்குகளில் நான் பார்க்கும் கடவுளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்.எனது தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் எனது குரு அர்ஜுன் சார் ஆகியோரின் இந்த கனவை தொடருவேன். நன்றி மட்டும் போதாது என்பது எனக்குத் தெரியும்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து வருகிறார்.

actor vishal directorlingusamy
இதையும் படியுங்கள்
Subscribe