vishal 34 movie update

Advertisment

மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து தனது 34வது படத்திற்காக ஹரியுடன் கூட்டணி வைத்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியிலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியிலும் நடந்து முடிந்தது. தூத்துக்குடியில், குடிநீர் வசதி இல்லாமல் கஷ்டப்படுவதாக அப்பகுதி மக்கள் சொன்ன பிறகு, உடனே 2 பெரிய சின்டக்ஸ் டேங்க் அமைத்து, குடிநீர் வசதி செய்து கொடுத்தார் விஷால். இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர்.

இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சியில் நடைபெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியகியுள்ளது. விஷால் கோபத்துடன் லாரியில் இறங்கிவந்து அரிவாள் எடுத்து அங்கு கட்டிபோட்டிருக்கும் ஒருவரை வெட்டுகிறார். இதை பார்க்கையில் இதுவரை ஹரி - விஷால் கூட்டணியில் வந்த தாமிரபரணி, பூஜை படங்கள் போல் ஆக்‌ஷன் அதிகம் கலந்த ஒரு கதை போல் தெரிகிறது. இப்படத்திற்கு ரத்னம் என தலைப்பு வைக்கபட்டுள்ளது. அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது.