Advertisment

குறும்பட இயக்குநருடன் கைக்கோர்த்த விஷால்! பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்!

vggrsgsr

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் தயாரித்துநடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்காலிகமாக 'விஷால் 31' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்குகிறார். இவர், ‘குள்ளநரிக்கூட்டம்’,‘தேன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். து.பா. சரவணன் சமீபத்தில் இயக்கிய ‘எது தேவையோ அதுவே தர்மம்’என்ற குறும்படம் திரைத்துறையில் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இக்குறும்படத்தினால் ஈர்க்கப்பட்ட நடிகர் விஷால், தனது அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை து.பா. சரவணனுக்கு வழங்கியுள்ளார்.

Advertisment

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள இப்படம், அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, என்.பி. ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.எஸ். மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். தற்போது நடிகர், நடிகை தேர்வு உள்ளிட்ட முதற்கட்டப் பணிகளில்படக்குழு கவனம் செலுத்திவரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (06.05.2021) பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை ஒரேகட்டமாக முடித்து, வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisment

actor vishal vishal 31
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe