/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/104_8.jpg)
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் உருவான ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் படத்தில் விஷால் கவனம் செலுத்திவருகிறார். இது நடிகர் விஷாலின் 31ஆவது திரைப்படமாகும். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்தது. அதில், விஷால் மற்றும் வில்லன் பாபுராஜ் சம்மந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்த முதற்கட்டப் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, சென்னை திரும்புகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)