/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/154_4.jpg)
அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹயாத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'விஷால் 31'. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் மூலம் விஷால் தயாரிக்கும் இப்படத்திற்கு, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் சென்னையில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பானது கரோனா இரண்டாம் அலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் அதிக அளவில் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில், தற்போது ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத் விரைந்த ‘விஷால் 31’ படக்குழு, படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முன்னர் திட்டமிட்டிருந்தது. கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால், தற்போது படப்பிடிப்பை விரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ள படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலேயே நடத்தும் முடிவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)