Advertisment

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஷால் படம்!

bdsbs

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் ‘எனிமி’படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், தற்போது நடிகர் விஷாலின் அடுத்த படமான 'விஷால் 31'படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 50 நாட்களாக ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்றுமுதல் 10 நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதைதான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகிவருகிறது.

Advertisment

படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்பட்டு, படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி நாயகியாக அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, ஆர்.என்.ஆர். மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ், பிளாக் ஷீப் தீப்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினைத் தயாரிக்கிறார். குறும்பட இயக்குநர் து.பா. சரவணனன் எழுதி இயக்குகிறார். முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Advertisment

actor vishal Thu Pa Saravanan vishal 31
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe