Advertisment

மீண்டும் இணைந்தது 'கொம்பன்' கூட்டணி... பூஜையுடன் பணிகள் தொடக்கம்!

Viruman movie poojai

கிராம பின்புலம் கொண்ட கதைகளை இயக்குவதில் கைதேர்ந்தவரான இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கடைசியாக வெளியான 'புலிக்குத்தி பாண்டி' திரைப்படம் நேரடியாக சன் டிவியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இருந்த முத்தையா, கடந்த சில மாதங்களாக அப்படத்திற்கான ஆரம்பக்கட்டப்பணிகளில் ஈடுபட்டுவந்தார்.

Advertisment

இந்த நிலையில், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. ‘விருமன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார். இது, திரைத்துறையில் அவரது அறிமுகப்படமாகும். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளன. சென்னையில் நடைபெற்ற பூஜை நிகழ்வில் இயக்குநர் ஷங்கர், பாலா, முத்தையா மற்றும் நடிகர் கார்த்தி, சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தைத் திரைக்குக்கொண்டுவரும் யோசனையில் உள்ள படக்குழு, முதற்கட்ட படப்பிடிப்பைத்தேனி சுற்றுவட்டாரப்பகுதிகளில் விரைவில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

Advertisment

actor karthi muththaiya
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe