/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/672_2.jpg)
இயக்குநர்முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் படம் விருமன்.இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, இறுதிகட்டபணியில் தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கனவே வெளியானபடத்தின் முதல் பாடலான "காஞ்ச பூ கண்ணால..." பாடலின் ப்ரோமோ வீடியோநல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் முழு பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கு கருமாத்தூர் மணிமாறன் வரிகளில் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். கிராமத்து காதல் பாடலாகஇப்பாடல் உருவாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)