Advertisment

"அனுஷ்கா சர்மாவை கோலி விவாகரத்து செய்ய வேண்டும்"- பா.ஜ.க. எம்.எல்.ஏ!

paatal lok

Advertisment

இணையத்தில் தற்போது வைரலாகி வரும்வெப்தொடர் பாதாள்லோக். இந்த வெப் தொடரைபிரபல நடிகையும், விராத் கோலியின்மனைவியுமான அனுஷ்கா ஷர்மாதயாரித்துள்ளார்.

வட இந்தியாவில் நடைபெறும் பல நிழல் உலக அரசியல் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத்தொடரானது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.

அதேபோல பல சர்ச்சைகளுக்கும் உள்ளாகியுள்ளது. இந்தத் தொடரில் அருணாசல பிரதேச மாநிலத்தில் வாழும் குறிபிட்ட இன மக்களை அவதூறு செய்வதுபோன்ற காட்சிகள் இருப்பதாக அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் தேசிய மனித உரிமை கமிஷனில் புகார் அளித்துள்ளனர்.

Advertisment

இதற்கிடையே உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ நந்தகிஷோர் குர்ஜார் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி வெப் தொடரில் பயன்படுத்தி உள்ளதாக அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து எம்.எல்.ஏ. குர்ஜார் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,"விராட்கோலிஅவரது மனைவி அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும். விராட் கோலிதேசபக்தர். அவர் இந்தியாவின் பிரதிநிதி" என்று தெரிவித்துள்ளார்.

anushka sharma
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe