Skip to main content

கரோனா நிவாரணம்! 2 கோடி கொடுத்த அனுஷ்கா - விராட் தம்பதி!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

grsdfhdfh

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. மேலும், கரோனாவால் பாதித்தவர்களுக்கு, வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட், பாண்ட்யா சகோதரர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்தனர்.

 

இந்த நிலையில், கரோனா நிவாரணப் பணிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோர் ‘கெட்டோ’ என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைன் மூலமாக ரூ. 7 கோடி நிதி திரட்டி அளிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு தங்களது பங்களிப்பாக விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் இணைந்து ரூ. 2 கோடி வழங்கியுள்ளனர். இந்த நிதியுதவி இந்தியாவில் கரோனாவினால் பாதித்தவர்களின் சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ தேவைகளுக்கு தொண்டு நிறுவனம் மூலம் செலவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து விராட்கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதி நேற்று (07.05.2021) சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டு பேசியுள்ளனர்... "தற்போது இந்தியாவில் மிகவும் கடினமான சூழ்நிலை நிலவி வருகிறது. கரோனாவுக்கு எதிராக நாம் போராடி வருகிறோம். கரோனாவினால் நமது நாடு இதுபோல் பாதித்திருப்பதைப் பார்ப்பதற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க இரவு பகலாக பாடுபடும் அனைத்து தரப்பினருக்கும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவர்களது அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியதாகும். ஆனால், தற்போது நம்முடைய ஆதரவு அவர்களுக்குத் தேவையானதாகும். எனவே நாம் அனைவரும் நிச்சயம் அவர்கள் பக்கம் உறுதுணையாக நிற்க வேண்டும். இதனால்தான் நாங்கள் இந்த நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த நிதி கரோனா நிவாரணப் பணிகளுக்கு அளிக்கப்படும்.

 

இந்த முயற்சியில் நீங்கள் எல்லோரும் இணைவதுடன், உங்களால் முடிந்த நன்கொடையை அளிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு சிறிய விஷயமும் வித்தியாசத்தை ஏற்படுத்தும். எங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் இது நாம் ஒருவருக்கொருவர் தோளோடு, தோள்கொடுத்து நிற்க வேண்டிய தருணமாகும். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற முடியும். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கிரிக்கெட் மட்டுமல்ல எல்லாத்துலயும் ‘நம்பர் 1’ தான்; விராட்டின் புதிய சாதனை

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Not just cricket but 'No. 1' in everything; Virat's new record

 

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரும் அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி நடப்பு தொடரில் 639 ரன்களை விளாசியுள்ளார். அதில் 2 சதங்களும் அடக்கம். 139 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 53.25 சராசரியுடன் நடப்பு சீசனில் அவர் விளையாடியுள்ளார். 

 

மேலும் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதமடித்தவர் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இதுவரை விராட் 7 சதங்களை பதிவு செய்துள்ளார். இரண்டாம் இடத்தில் கிறிஸ் கெயில் 6 சதங்களை அடித்துள்ளார். தொடர்ந்து அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலிலும் விராட் முதலிடத்தில் உள்ளார். 

 

ஐபிஎல் தொடரில் இருந்து அவரது அணி வெளியேறிய பின் தற்போது அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது லண்டன் சென்றுள்ள அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தன்னை முழுமூச்சில் தயார்படுத்தி வருகிறார். 

 

ப்ளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெறவில்லை என்றாலும் கூட இரண்டு நாட்கள் இணையத்தை கலக்கினார் கோலி. தற்போது அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் 1601 பதிவுகளுடன் 250 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ளார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்கிற பெருமையைப் பெறுகிறார்.


 

 

 

Next Story

ஒரே காரணத்திற்காக அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மா மீது போலீஸ் நடவடிக்கை

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

Amitabh Bachchan and Anushka Sharma in trouble for not wearing helmet while bike riding

 

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் நேற்று படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என போக்குவரத்துக்கு நெரிசலை தவிர்க்க பைக் ஓட்டி வந்த ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அந்த நபருக்கு நன்றி தெரிவித்திருந்தார். அந்த புகைப்படத்தை பார்க்கையில் இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. இதனை சமூக வலைத்தளத்தில் மும்பை போலீஸ் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். 

 

இதேபோன்று நடிகை அனுஷ்கா ஷர்மாவும் ஒருவருடன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் தற்போது அதற்கு மும்பை போலீஸார் பதிலளித்துள்ளனர். இருவரும் ஹெல்மெட் போடாதது தொடர்பாக  டிராபிக் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.  

 

மும்பை போலீசின் இந்த பதிவிற்கு மன்னிப்பு கேட்டு அவரது வலைப் பதிவில் பதிவிட்டுள்ளார் அமிதாப் பச்சன். தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'ப்ராஜெக்ட் கே', 'செக்‌ஷன் 84' படத்தில் நடித்து வருகிறார் அமிதாப் பச்சன். அனுஷ்கா சர்மா 'சக்தா எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்து வருகிறார்.