நடிகர் திலகம் சிவாஜி கணேஷனின் பேரனான விக்ரம் பிரபுவின் மகன் விராட்டிற்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதை ட்விட்டரில் விக்ரம் பிரபு பதிவிட்டுள்ளார்.
அதில், “ என்னுடைய மகனின் பிறந்தநாளிற்காக நீங்கள் உங்களுடைய நேரத்தை செலவழித்து வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி. என் மகன் இந்த வீடியோவை பார்த்து உற்சாகம் அடைந்தான். அதேபோல மேற்கு இந்தியாவிற்கு எதிரான போட்டில் இந்தியாவின் வெற்றியையும் கொண்டாடினான்” என்று பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த பலரும் விக்ரம் பிரபுவின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.