இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து, பின் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணம் இத்தாலியில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன்பின் இருவரும் அவர் அவர் துறைகளில் கவனம் செலுத்தி வந்தனர்.
அனுஷ்கா ஷர்மா நடிப்பு மட்டுமின்றி நல்ல படங்கள், வெப் சீரிஸ் தயாரிப்பதில் ஆர்வம் காண்பித்து வந்தார். இந்நிலையில் விராட் கோலி தனது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி தரும் வகையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கிறார். அவரை அணைத்தபடி விராட் கோலியும் இருக்கிறார். மேலும், அந்தப் புகைப்படத்துடன் இனி நாங்கள் மூவர், 2021 ஜனவரி வந்துவிடுவார் என்று குழந்தை குறித்து தெரிவித்துள்ளார்.