Advertisment

"காளிமுத்து பேரன், சீமானின் மாவீரன்..." - வைரலாகும் வைரமுத்துவின் பதிவு  

viramuthu tweet about seeman son

கவிஞர் வைரமுத்து தமிழாற்றுப்படை என்ற புத்தகத்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார்.தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி தமிழை நோக்கி கேட்பவர்களை, வாசிப்பவர்களை ஆற்றுப்படுத்தும் என்கிற நம்பிக்கையால்வைரமுத்து எழுதி வெளியிட்ட இந்தப் புத்தகம் பலரிடம் பாராட்டுகளைப் பெற்றது. குறிப்பாக இந்தப் புத்தகத்தை படித்த ரஜினிகாந்த், தமிழாற்றுப்படை புத்தகத்தைபடித்த பிறகு வைரமுத்து மீதான மதிப்பு 100 மடங்கு அதிகரித்துள்ளது எனப் புகழ்ந்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின்மகன் மாவீரன் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை புத்தகத்தைப் படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில்பதிவிட்ட வைரமுத்து,

Advertisment

"காளிமுத்து பேரன்

செந்தமிழன் சீமானின்

திருச்செல்வன் மாவீரன்

தமிழாற்றுப்படையோடு

உறவாடி விளையாடும்

ஒளிப்படங்கள் கண்டேன்

நாளையொரு பூமலர

நல்லதமிழ்த் தேன்சிதற

வாழையடி வாழையென

வளருமடா தமிழ்க்கூட்டம்

என்று வாய்விட்டுச்

சொல்லிக்கொண்டேன்

தமிழாற்றுப்படையோடும்

தமிழர் படையோடும்

வா மகனே" எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

book kavignar vairamuthu seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe