Advertisment

"கொம்புள்ள யானையும் கொள்கையுள்ள தலைவனுமே குறிவைக்கப்படுகிறார்கள்" - கவிஞர் வைரமுத்து  

viramuthu praised tn cm mk stalin

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. இதனைத்தொடர்ந்துதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில்அரசியல் கட்சி தலைவர்கள் தொண்டர்கள் என பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்தவகையில்கவிஞர் வைரமுத்து முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

"முதலமைச்சே!

பிறையில் முழுநிலா

உறைவது போல

உன்

ஓராண்டு ஆட்சியில்

நூறாண்டுச் சாதனைகள்

என்றாலும் எதிர்ப்பு

கொம்புள்ள யானையும்

கொள்கையுள்ள தலைவனுமே

குறிவைக்கப்படுகிறார்கள்

கொம்பு மட்டுமா

திராவிடக் காடுகாக்கும்

தெம்புள்ள யானை நீ

பேனாவோடு

புதைக்கப்பட்ட கலைஞர்

உனக்கொரு கவி வரைவார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

kavignar vairamuthu cm stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe