viram joined in twitter officially

விக்ரம், தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' படத்தில் மற்றும் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடித்துள்ளார். இதில் 'கோப்ரா' படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியும், 'பொன்னியின் செல்வன்' படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து பா.ரஞ்சித் இயக்கும் 'சியான் 61' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ ஞானவேல்ராஜா தயாரிக்க ஜி. வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

Advertisment

இந்நிலையில் விக்ரம் சமூக வலைதளத்தில் ஒன்றான ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ட்விட்டர் கணக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே பல்லாயிரக்கணக்கானோர் விக்ரமை பின் தொடர ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் விக்ரம் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் இந்த ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

Advertisment