“எல்லா சோஃபாவும் எல்.ஐ.சி படத்தில் இருக்கும்” - வீடியோ வைரல்

viral sofa child in vignesh shivan lic movie

இயக்குநர் விக்னேஷ் சிவன், தற்போது பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்குகிறார். கதாநாயகியாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்க எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த மாதம் தொடங்கி, பின்பு படத்திற்கு ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனத் தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால் இந்த தலைப்பு என்னுடையது என்று கூறி இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன், விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பதாக அறிக்கை வெளியிட்டார். பின்பு எல்.ஐ.சி நிறுவனம், லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பு பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி பட நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

இப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. மேலும் இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக விவசாயி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் தொடங்கியது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் சோஃபா விற்று பிரபலமான நிஃப்யா ஃபர்னிச்சர் முகமது ரசூல் என்ற சிறுவன், இப்படத்தில் நடிப்பதாக தெரிகிறது. படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன், அச்சிறுவன் இருக்கும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அச்சிறுவன், விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், ரவிவர்மன் உள்ளிட்ட சில நடிகர்களை சோஃபாவாக பாவித்து, கிண்டல் செய்வது போல் ஜாலியாக பேசுகிறான். இறுதியில், “இது எல்லா சோஃபாவும் வேணும்னா, எல்.ஐ.சி படத்தை பாருங்க. எல்லா சோஃபாவும் அதில் இருக்கும்” என கூறுகிறான். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Pradeep Ranganathan vignesh shivan
இதையும் படியுங்கள்
Subscribe