Advertisment

"கைப்புள்ள இஸ் பேக்" - விரைவில் 'வின்னர் 2'

vinnar 2 movie update out now

Advertisment

கடந்த 2003 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான படம் வின்னர். கிரண், வடிவேலு, ரியாஸ் கான் உள்ளிட்டோர் முக்கியகதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும்வடிவேலுவின் காமெடி காட்சிகள் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடிக்க, ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி தீர்த்தனர். சொல்லப்போனால் இப்படத்தில் வடிவேல் செய்யும் காமெடிகளும், அவர் காட்டும் பாடி லாங்வேஜும்தற்போது வரை ட்ரெண்டிங்கிலும், மீம் டெம்லேட்டுமாகஉள்ளன.

இதனிடையே பேசி இப்படத்தின் நடிகர்பிரசாந்த் கண்டிப்பாக வின்னர் படத்தின் 2 ஆம் பாகம் எடுக்கப்படும் என்றார். இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருச்செந்தூர்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வின்னர் படத்தின் இரண்டாம் பாகம், முதல் பாகத்தை விட பிரமாண்டமாக இருக்கும். ரசிகர்கள் என் மீதுபயங்கரமான அன்பு வைத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். விரைவில் வின்னர் படத்தின் 2 ம் பாகத்திற்கான பணிகள் தொடங்கும் எனவும் கூறியுள்ளார். இதிலும்வடிவேலுதான் பிரசாந்த், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

tamil cinema actor Vadivelu Prashanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe