sdg

சிம்பு - கெளதம் மேனன் - த்ரிஷா கூட்டணியில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது.

Advertisment

மேலும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கிடையே இப்படத்தின் தொடர்ச்சியாக 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படம் நேற்று முன்தினம் வெளியாகி வைரலானது. ஒன்றாக எண்டர்டையின்மெண்ட் சார்பாக கெளதம் மேனன் இயக்கிய இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படம் உருவாகவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. சிம்பு தற்போது நடித்து வரும் 'மாநாடு' படத்தை முடித்த கையோடு 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்துக்குத்தான் தேதிகள் ஒதுக்கியுள்ளதாகவும், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகிவுள்ளது. மேலும் இப்படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.