vinayakan apologized talking controversially sexual relationship 10 women

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விநாயகன், சமீபத்தில் தான் நடித்த ’ஒருத்தி’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய விநாயகன், "சமீப காலமாக மலையாள சினிமாவில் மீ டூ குறித்து அதிகம் பேசப்படுகிறது, அது என்னவென்று எனக்கு புரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி அவருடன் உறவு வைத்துக் கொள்வதுதான் மீ டூ வா ? என்று தெரியவில்லை. எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருந்தால், அந்த பெண்ணிடம் என்னுடன் உறவு வைத்துக்கொள்ள விருப்பமா என கேட்பேன், அதற்குசம்பந்தப்பட்ட பெண் விருப்பம் தெரிவித்தால் உறவு வைத்துக்கொள்வேன். அதுதான் மீ டூ என்றால் அதை நான் திரும்பவும் செய்வேன். இப்படி என் வாழ்நாளில் நான் 10 பெண்களிடம் உறவு வைத்துள்ளேன்" எனக் கூறினார்.

Advertisment

இவரின் இந்த கருத்து மலையாள திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.மேலும் நடிகர் விநாயகன் கருத்திற்கு எதிராக கேரளாவில் பெண்கள் அமைப்புகளும், நடிகை பார்வதி, இயக்குநர் விதுவின்சென்ட் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில் நடிகர் விநாயகன் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நான் பெண்களுக்கு எதிராக அதன் தீவிரத்தை அறியாமல் சில கருத்துக்களை தெரிவித்துவிட்டேன். இது யாரையாவது பாதித்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனக்குறிப்பிட்டுள்ளார்.