தமிழில் தனுஷ், சிம்பு, விஷால் படங்களில் நடித்தவர் கேரள நடிகர் விநாயகன். தமிழில் திமிரு, சிலம்பாட்டம், மரியான் மற்றும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவருக்கு பிரபலம் குறைவு என்றாலும் கேரள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மிருதுளாதேவி சசீதரன் என்ற இளம்பெண்ணிடம் செல்போனில் தகாத முறையில் சாதீய ரீதியாக பேசியதாக பேஸ்புக்கில் மிருதுளாதேவி பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vinayagan.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
அதில் சினிமாவில் நடிகைகள் அவர் மீது நல்ல மதிப்பு வைத்திருந்தாலும், அவர் பர்சனல் வாழ்க்கையில் பெண்களுக்கு எதிராக செயல்படக் கூடியவர். எனக்கு அவர் மீது எந்த மதிப்பும் கிடையாது. ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தவர், என்னுடன் தனிமையில் இருக்கப் போவதாகவும், என் தாயும் அவருக்கு தேவை என்றும் கூறினார் என மிருதுளாதேவி சசீதரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். அவரது பேச்சு செல்போனில் ரெகார்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் தனது பதிவில் அவர் கூறியிருக்கிறார். ஆனால் இதனை மறுத்த விநாயகன், தாம் ஒரு போதும் சாதிய ரீதியாக பேசுவதோ, அடுத்தவர்களிடம் சாதி பார்ப்பதோ கிடையாது என்று தெரிவித்தார்.
இதனையடுத்து அவரை கைது செய்யக்கோரி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன.இதனால் விநாயகன் மீது 4 பிரிவுகளில் போலீஸார் கடந்த ஜூன் 15ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர். 506, 294பி, கேபிஏ 120, 120ஓ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தனது வழக்கறிஞருடன் வயநாடு காவல்நிலையத்துக்கு வந்த விநாயகன், சரணடைந்தவுடனேயே பெயில் பெற்று திரும்பிவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)