Advertisment

'விரைவில் டும் டும் டும்...' - பிரபல நடிகையை காதலிக்கும் வினய்

vinay loves vimala raaman

தமிழில் 'உன்னாலே உன்னாலே' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வில்லனாக கலக்கிக்கொண்டு இருப்பவர் 'வினய்'. இவர் ஹீரோவாக மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு போன்ற படங்களில் நடித்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரது நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். அதனை தொடர்ந்து இவர் வில்லனாக நடித்து வெளிவந்த 'டாக்டர்', 'எதற்கும் துணிந்தவன்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் வினைக்கும் பிரபல நடிகை விமலா ராமனுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சமீபகாலமாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை விமலா ராமன் பாலசந்தர் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு வெளியான 'பொய்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். பின்பு சேரன் நடிப்பில் வெளியான 'ராமன் தேடிய சீதை' படத்தில் நடித்தார். இவர்களின் திருமணம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisment

Etharkkum Thunindhavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe