Skip to main content

டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வராத சர்ச்சை; இயக்குநர் அமீர் விமர்சனத்திற்கு விமல் விளக்கம்!

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

Vimal's explanation for director Aamir's criticism!

 

விமல் - தன்யா ஹோப் நடிப்பில் ‘குட்டிபுலி’ சரவண சக்தி இயக்கத்தில் விஜய் சேதுபதி வசனத்தில் உருவாகியுள்ள படம் ‘குலசாமி’. இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு இப்படத்தின் நடிகர் விமல் வராதது வருத்தமளிப்பதாகப் பேசினார்.

 

இது குறித்த கேள்வியை பத்திரிகையாளர் சந்திப்பின் போது கேட்டபோது விமல் பேசியதாவது “விலங்கு வெப்சீரிசுக்கு பிறகு நல்ல படைப்புகளுக்கு முக்கியத்துவம் தந்து நடிக்கிறேன். முழுக்க நகைச்சுவையான, முழுக்க முழுக்க சீரியசான போன்ற தரத்தில் படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். என்னுடைய படமான ‘குலசாமி’ டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வராமல் போனதற்கு இயக்குநர் அமீர் அண்ணனிடம் என்ன காரணம் என்று பேசிவிட்டேன். எம்ஆர்சி நகரில் தெய்வ மச்சான் படத்தின் நிகழ்ச்சி அதே நாளில் அதே நேரத்தில் நடந்தது. அந்த படக்குழு 20 நாட்களுக்கு முன்னரே என்னுடைய தேதியை வாங்கி விட்டார்கள். இதுதான் காரணம். இது குறித்து படக்குழுவிடம் சொன்னேன்; அவர்கள் இயக்குநர் அமீர் அண்ணனுக்கு சொல்லாமல் விட்டு விட்டார்கள். நானும் அவரை தொடர்பு கொண்டு விளக்கம் அளித்துவிட்டேன்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் வெளியிட்ட வெற்றிமாறன் வெளியிடும் பட அப்டேட்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
vetrimaaran presents vemal starring bose venkat directing ma.po.si movie first look released

சின்னத்திரையில் அறிமுகமாகி, அதற்கு பிறகு பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் போஸ் வெங்கட். இவர் 'கன்னி மாடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு சில சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை கைப்பற்றியது. 

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சிராஜ் தயாரிப்பில் ஒரு படம் இயக்குகிறார். 'மா.பொ.சி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் கன்னி மாடம் படத்தில் நடித்த ஸ்ரீ ராம் கார்த்திக், சாயா தேவி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சித்து குமார் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். 

vetrimaaran presents vemal starring bose venkat directing ma.po.si movie first look released

இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வெளியிடுவதாக கடந்த 1ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்போஸ்டரை சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், சமுத்திரக்னி, லால் உள்ளிட்டோர் அவரகளது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

வாத்தியார் கெட்டப்பில் விமல் நடித்துள்ளார். பள்ளிக்கூடத்தில் கல்வியை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. மேலும் போஸ்டரில் விமல் முகத்தில் ரத்தக் கறையுடன் கையில் சாக்பீஸ் உடன் இடம் பெறுகிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. 

Next Story

விமல் படக்குழுவுடன் வெற்றிமாறன் கூட்டணி

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
vetrimaaran release the vemal movie ma.po.si

போஸ் வெங்கட், பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் 'கன்னி மாடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு சில சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை கைப்பற்றியது. 

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சிராஜ் தயாரிப்பில் ஒரு படம் இயக்குகிறார். 'மா.பொ.சி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் கன்னி மாடம் படத்தில் நடித்த ஸ்ரீ ராம் கார்த்திக், சாயா தேவி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சித்து குமார் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். 

vetrimaaran release the vemal movie ma.po.si

இந்த நிலையில் இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வெளியிடுகிறது. விரைவில் படத்தின் டீசர், ட்ரைலர், மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.