vimal

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

'தமிழன் ',' பைசா ', 'டார்ச் லைட்' படங்களுக்குப் பின் இயக்குநர் மஜீத் இயக்கும் புதிய படம் 'தி புரோக்கர்'. இப்படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. நாயகனாக விமல், நாயகியாக 'அண்ணாதுரை 'பட நாயகி டயானா சாம்பிகா, மற்றும் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா ,வினோத், தம்பி ராமையா, மயில்சாமி,உட்பட பல காமெடி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இது திருமணத்துக்குப் பெண் பார்க்கும் தரகர் சம்பந்தப் பட்ட கதை. திருமணம் சார்ந்த பின்னணியில் இப்படம் உருவாவதால் கலகலப்புக்கும் விறுவிறுப்புக்கும் படத்தில் பஞ்சமில்லை என படக்குழு அறிவித்துள்ளது. கான்பிடன்ட் பிலிம் கேஃப் சார்பில் உருவாகும் இப்படம் பூஜையுடன் தொடங்கி சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.