"விலங்கு 2 ஆரம்பிக்கப்பட உள்ளது; வதந்தி பற்றி எனக்கே சந்தேகமாத்தான் இருக்கு" - விமல்

vimal in vilangu 2 update

நடிகர் விமல்'விலங்கு' வெப்சீரிஸின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதியின் 'டிஎஸ்பி' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதனிடையே பல படங்கள் இவரது நடிப்பில் உருவாகி சில காரணங்களால் ரிலீஸாகாமல் உள்ளன.இப்போது புதுமுக இயக்குநர் மைக்கேல் இயக்கும் படம், போஸ் வெங்கட் இயக்கத்தில் 'மா.பொ.சி' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் 'க/பெ ரணசிங்கம்' பட இயக்குநர் விருமாண்டி இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் விமல் சாமி தரிசனம் செய்துள்ளார். தனது குடும்பத்துடன் அங்கு சென்ற விமலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவரை கண்டவுடன்அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த விமல் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசுகையில் "மூன்று படங்களில் நடித்து வருகிறேன். விரைவில் விலங்கு 2 ஆரம்பிக்க உள்ளது. முருகன் அருளால் அடுத்தடுத்து நல்ல ப்ராஜெக்ட்டுகள் கிடைத்துள்ளது. காமெடி ஜானரில் புது படம் ஒன்று நடிக்கிறேன். அதில் யோகிபாபுவும் நடிக்கிறார். விலங்கு தொடருக்கு பிறகு நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். அந்த வகையில் 'மா.பொ.சி' படம் 1980 இல் நடக்கிற ஒரு கதை. அதற்கேற்றாற்போல் ஹேர்ஸ்டைல், பாடி லாங்குவேஜ் என மாற்றி நடிக்கிறேன். இந்த படம் வித்தியாசமாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என் நம்புகிறேன்.

இயக்குநர் மைக்கேல் இயக்கும் படத்தில் நானும் கருணாஸ் அண்ணனும் இணைந்து முதல் முறையாக நடிக்கிறோம். அதில் சென்னை ஸ்லாங்கில் பேசி நடிக்கிறேன். சமீப காலமாக என்னைப்பற்றி வந்த வதந்திகள் எப்படி வருகிறது என்று தெரியவில்லை. எனக்கே சந்தேகமாகத்தான் இருக்கிறது. அதை அனைத்தும் எல்லாம் வல்லமுருகன் பார்த்துக்கொள்வார்" என்றார்.

vimal
இதையும் படியுங்கள்
Subscribe