/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/370_8.jpg)
‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட பல படங்களில் நடித்து பிரபலமானவர் விமல். கடைசியாக 'விலங்கு' வெப் சீரிஸில் நடித்திருந்தார். நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து 'எங்க பாட்டன் சொத்து', 'மஞ்சள் குடை', 'குலசாமி' உள்ளிட்ட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே விமல், கே.அண்ணாதுரை தயாரிப்பில் 'துடிக்கும் கரங்கள்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மிஷா நரங், சதிஷ், சௌந்தர ராஜா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வேலுதாஸ் இயக்கும் இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் 'துடிக்கும் கரங்கள்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை ஜி.வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விமல், கையில் துப்பாக்கியுடன் ஸ்டைல் லுக்கில் நிற்கிறார். இதனிடையே ரசிகர்கள் பலரும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)