‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட பல படங்களில் நடித்த விமல், கடைசியாக ‘கன்னிராசி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அடுத்ததாக இயக்குநர் பிரசாத் பாண்டியராஜ் இயக்கத்தில் விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். இதில் இனியா, முனீஷ்காந்த் பாலா சரவணன்,ஆர்.என்.ஆர் மனோகர் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
7-எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், ஒரு புலனாய்வு தொடராக க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது. எளிய காவலர்களின் வாழ்க்கையை சொல்வதோடு, அவர்களின் உணர்வுபூர்வமான பக்கத்தையும் சொல்வதாக அமைந்துள்ளது. இந்த தொடர் பிப்ரவரி 18 ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.