‘பரமசிவன் பாத்திமா’ பட ஓ.டி.டி. அப்டேட்

09

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல், சாயாதேவி நடிப்பில் கடந்த மாதம் 6ஆம் தேதி வெளியான படம் ‘பரமசிவன் பாத்திமா'. இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தீபன் சக்ரவர்த்தி இசையமைத்திருந்தனர். 

மதப் பிரிவினை வாதத்தை வைத்துக் கொண்டு அது காதலுக்கு எந்தளவு தடையாக இருக்கிறது என்பதை இப்படம் பேசியிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 

ஜூலை 4ஆம் தேதி இப்படம் ஆஹா ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் ஆஹா ஓ.டி.டி. நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கான்ட்ரவர்சியான ஒரு கதையை இப்படம் பேசியதால் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க ஆவலாக உள்ளனர்.

aha app OTT vimal
இதையும் படியுங்கள்
Subscribe