Advertisment

"45 நாள் ஆச்சு; உண்மையிலேயே நானும் மாறிவிட்டேன்" - விமல்

Advertisment

vimal speech at Thudikkum Karankal Audio Launch

வேலு தாஸ் இயக்கத்தில் அண்ணாதுரை தயாரிப்பில் விமல், மிஷா நரங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'துடிக்கும் கரங்கள்'. ராகவ் பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், படக்குழுவினர்பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

அப்போது விமல் பேசுகையில், "நிறைய பேரு படமே வரமாட்டேங்குதுனு சொல்றாங்க. ஆண்டவன் புண்ணியத்தில் இப்போது நிறைய படம் நடிச்சிகிட்டு வரேன். கையெழுத்து போடுறதில்லை. அதனால் இனிமேல் நிறைய படங்கள் வரும். சினிமாவுக்கு வந்த புதுசில் நீட்டின இடத்தில எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டேன். அதை முடிக்க 6 வருஷம் ஆச்சு. லாக்டவுன் சமயத்தில் இப்படம் தான் எனக்கு கைகுடுத்துச்சு. அதனால் இப்படம் எனக்கு ஒரு ஸ்பெஷல்.

ரோபோ ஷங்கர் 6 மாசமா உடல் நிலை சரியில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டு சொன்னார். அந்த நேரத்தில் எனக்கே சங்கடமாக இருக்கும். அவரோடு ஃபோன் கூட பேசமாட்டேன். ஆனால் அவரை பற்றி அவரது வீட்டில் விசாரிப்பேன்" என்றார். உடனே மேடையில் இருந்த ரோபோ ஷங்கரை பார்த்து, "மாமா...நீங்க கவலைபடாதீங்க. நீங்க ஒரு பல்கலைக்கழகம். உங்களை பார்த்து பல பேர் திருந்திருக்காங்க. உடலை கட்டுப்பாடுடன் வைத்து கொள்வதில் ஆர்வமாக இருக்காங்க" என்றார்.

பேசி முடித்துவிட்டு மேடை இருக்கையில் அமர்ந்த விமலிடம், பல பேர் மாறிவிட்டார்கள் என சொல்றாங்க, ஆனால் உங்களை பற்றி சொல்லவில்லையே.. என கேட்க, திருப்பியும் மைக் அருகில் வந்த விமல், "45 நாள் ஆச்சு. உண்மையை தான் சொல்கிறேன். நானும் மாறிவிட்டேன்" என்றார்.

vimal
இதையும் படியுங்கள்
Subscribe