“நான் தூக்கி விட்ட இரண்டு பேர் காலை வாரி விட்டார்கள்” - விமல்

vimal speech in sir trailer launch

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சார்’. இப்படத்தில் கதாநாயகியாக சாயா தேவி நடித்திருக்க சிராஜ் , சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.எஸ். பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி மூலம் வெளியிடுகிறார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் வெற்றிமாறன், விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் விமல் பேசுகையில், “போஸ் மாமா கதை சொல்ல வந்தார், எனக்கு ரொம்ப பிடித்தது. வாகை சூடவா படத்திற்கு பிறகு எனக்குநல்ல படம் தந்துள்ளார். அவரே நடித்து காட்டி, தான் நடிக்க வைப்பார், அருமையாக படத்தை எடுத்துள்ளார். எங்களை வாழ்த்த வந்துள்ள வெற்றிமாறன் சார், அவர் இந்த படத்திற்குள் வந்த பிறகு தான், இப்படம் முழுமையான சார் ஆகியிருக்கிறது நன்றி. என்னை எப்போதும் ஊக்கம் தந்து, தூக்கிவிடும் நண்பர் விஜய் சேதுபதி,நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம், என்னை போன் செய்து, உற்சாகப்படுத்துவார், அவரால் தான் நான் இப்போது கொஞ்சம் நன்றாக பேச ஆரம்பித்துள்ளேன்.

வெற்றிமாறன், விஜய் சேதுபதி இருவருமே மற்றவர்களை கை கொடுத்து தூக்கவிட வேண்டும் என்று நினைக்க கூடிய ஆட்கள். நானும் கை கொடுக்கலாம் என இரண்டு பேரை தூக்கி விட்டேன். ஆனால் அவர்கள் என் காலை வாரி விட்டார்கள். அதனால் கை கொடுத்தாலும் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கை கொடுக்க வேண்டும்” என்றார்.

actor vijay sethupathi vimal
இதையும் படியுங்கள்
Subscribe