vimal speech at deiva machan press meet

உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தெய்வ மச்சான்'. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு காட்வின் ஜெ. கோடன் இசையமைக்க பின்னணி இசையை அஜீஸ் கவனித்திருக்கிறார். இப்படம் வருகிற21ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் விமல், பாண்டியராஜன், அனிதா சம்பத், இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுபேசினர்.

Advertisment

இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் பேசுகையில், ''இந்த கதை மீது நம்பிக்கை வைத்துஎனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் உதயகுமார் மற்றும் வத்சனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகைகளும் தொழில்நுட்பக் கலைஞர்களும் என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துதங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதற்காக இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தின் கதைக்கு பொருத்தம் என்பதால் 'தெய்வ மச்சான்' எனப் பெயர் சூட்டி இருக்கிறோம். படத்தின் முன்னோட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. படத்திற்கும் ஆதரவளிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

Advertisment

நாயகன் விமல் பேசுகையில், ''தெய்வ மச்சான் முழுநீள நகைச்சுவை படம். பாண்டியராஜனுடன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம். 1997-98 ஆம் ஆண்டுவாக்கில் நான் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, பாண்டியராஜன்ஒரு வாகனத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது உணவருந்தக் கூட நேரமில்லாமல் பரபரப்பாக இயங்கக்கூடிய நட்சத்திர நடிகர் என்றும், இவரைப் போல் நாமும் ஒரு நாள் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போதே உணவருந்த வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது. ஆண்டவன் புண்ணியத்தில் நடிகராகி அதேபோல் வாகனத்தில் பயணிக்கும் போது உணவருந்தும் வாய்ப்பும் கிடைத்தது.

நாளைய இயக்குநர் போட்டியில் கலந்து கொண்ட பூகம்பம் என்ற ஒரு குறும்படத்தை எனக்கு காண்பித்தனர். அந்த குறும்படம் காமெடியாக இருந்தது. இதனை முழுநீள திரைப்படமாக உருவாக்குவதற்கு வேறு என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டவுடன், இயக்குநர் சில எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். அது சிறப்பாக இருந்தது. வேல. ராமமூர்த்தி குதிரை மீது அமர்ந்து வேட்டைக்காரராக வருகை தந்து நாயகனான என் கனவில் சொல்வது எல்லாம் நடந்துவிடும். அவர் கனவில் வந்து சொன்னவை எல்லாம் நடந்ததா..? இல்லையா..? என்பது தான் இப்படத்தின் கதை. தயாரிப்பாளர் உதயகுமார் எப்போதும் சிரித்த முகம் தான். தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, எங்களுடைய படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டது. அப்போது கூட எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிரித்தபடியே சூழலை எதிர்கொண்டார். அவருடைய நல்ல நோக்கத்திற்காக இந்த படம் வெற்றியடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.'' என்றார்.