அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், விமல் நாயகனாக நடிக்க, எல்சன் எல்தோஸ் மற்றும் இரட்டை இயக்குநர்கள் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், இன்னும் பெயரிடப்படாத படம் உருவாகிறது. இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக முல்லை அரசி நடிக்க, விடுதலை சேத்தன், பருத்திவீரன் சரவணன் உட்பட மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து, நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

Advertisment

எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். சமீபத்தில் காரைக்குடியில் பிரம்மாண்ட பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், படத்தை ஆரம்பித்த வேகத்தில் 45 நாட்களில் ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடித்துள்ளது படக்குழு. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவக்கியுள்ளது படக்குழு. விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.