/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/161_50.jpg)
அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், விமல் நாயகனாக நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தை அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்குகின்றனர்.
கிராமப்புற பின்னணியில், காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தின் பூஜை காரைக்குடியில், படக்குழுவினர் கலந்துகொள்ள நடந்தது. பின்பு படப்பிடிப்பும் தொடங்கியது. இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக முல்லை அரசி நடிக்க, 'விடுதலை' சேத்தன், 'பருத்திவீரன்' சரவணன் உட்பட மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கிறார்கள். எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்திருக்க ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த மற்ற தகவல்கள், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)