Advertisment

'ஒண்ணுமே தெரியாமல் வந்தேன்...என்னை உருவாக்கினார்' - கண்ணீருடன் விமல்

vimal

நவீன நாடகக்கலையின் முன்னோடியாக இருந்தவரும், சென்னை நவீன கூத்துப்பட்டறை நிறுவனருமான முத்துசாமி உடல்நலக்குறைவினால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82, தற்போது அவர் உடல் சின்மயா நகரிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரால் பயிற்றுவிக்கப்பட்ட திரையுலகை சேர்ந்த பல்வேறு நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இவரது மாணவரும், நடிகருமான விமல் கூத்துப்பட்டறை முத்துசாமி உடனான நினைவுகளை நம்மிடம் பகிரும்போது...

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

"இன்று வளர்ந்து வரும் நடிகர்களில் பல்வேறு நடிகர்கள் இவரிடம் இருந்து வந்தவர்கள் தான். அவர் இறந்ததை என்னால் நம்ப முடியவில்லை. ஐயா முத்துசாமி இன்னமும் நம் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நான் முதன்முதலில் 2002ஆம் ஆண்டு ஐயாவுடன் நடிப்பு கற்றுக்கொள்வதற்காக வந்து சேரும் பொழுது எனக்கு ஒன்றுமே தெரியாது. இவன் எதற்குமே சரிப்பட்டு வர மாட்டான் என்பவரை கூட மிகவும் அழகாக நடிப்பு சொல்லிக் கொடுத்து அவனை ஒரு நல்ல நடிகனாக மாற்றிவிடுவார். ஒரு கல்லைக் கூட நடிக்க வைத்து விடுவார். எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவர். அதேசமயம் எந்த விளம்பரமும் இன்றி எல்லோரிடமும் சமமாகவும் பழகக்கூடியவர். ரொம்ப அழகாக நடிப்பை வாங்க கூடியவர். அவரை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன்" என்றார்.

koothupattarai muthuswamy vimal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe