
நடிகர் விமல் மற்றும்'குட்டிப்புலி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான குட்டிப்புலி சரவணசக்தி ஆகியோர் இணையும் புதிய படம் பூஜையுடன் இன்று துவங்கியது.
எம்.ஐ.கே ப்ரொடக்ஷன் சார்பாக பி.இளையராஜா தயாரிக்கும் இந்தப் புதிய படத்தை எழுதி இயக்குகிறார் குட்டிப்புலி சரவண சக்தி. இவர் ஏற்கெனவே ஜே.கே. ரித்திஷ் நடித்த 'நாயகன்', ஆர்.கே சுரேஷ் நடித்த 'பில்லாபாண்டி' ஆகிய படங்களை இயக்கியவர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் நாயகியாக 'தடம்', 'தாராள பிரபு' படங்களின் நாயகி தான்யா ஹோப் நடிக்கிறார். மற்ற நடிகர்களின் விபரம் விரைவில் வெளியாக இருக்கிறது. இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)