Skip to main content

தடையை உடைத்து ரிலீஸாக உள்ள விமல் படம்!

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

vimal

 

விமல் - வரலட்சுமி நடித்து, இன்று வெளியாகவிருந்த படம் 'கன்னிராசி'. இப்படத்தை கிங் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகாவிற்கான விநியோகஸ்த உரிமையை, மீடியா டைம்ஸ் என்ற நிறுவனம் 17 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது. 

 

இந்தநிலையில், மீடியா டைம்ஸ் நிறுவனம், சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், கன்னிராசி படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியின் விநியோக உரிமையை, தாங்கள் 17 லட்ச ரூபாய்க்கு வங்கியுள்ளதாகவும், விநியோக உரிமையை வாங்கும்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 2018 -ஆம் ஆண்டுக்குள் படத்தை தயாரிப்பாளர் வெளியிடவில்லை எனவும் கூறியுள்ள அந்த நிறுவனம், தற்போது கன்னிராசி படத்தின் விநியோக உரிமையை, தயாரிப்பாளர் வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாகவும், எனவே தங்களிடம் பெறப்பட்ட 17 லட்ச ரூபாயை வட்டியோடு சேர்த்து 21 லட்சத்து 8 ஆயிரமாக வழங்கவேண்டும், அதுவரை படத்தை வெளியிடத் தடை விதிக்கவேண்டுமெனவும் கோரியிருந்தது.

 

அண்மையில் இந்தவழக்கை விசாரித்த நீதிமன்றம், கன்னிராசி படத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இதுதொடர்பாக பதிலளிக்க, கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவன உரிமையாளர் ஷாமின் இப்ராஹிம், வரும் டிசம்பர் 7 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

 

தற்போது மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ஷமீன் இப்ராஹிமுக்கும் இடையே சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னிராசி திரைப்படத்தை டிசம்பர் 4 -ஆம் தேதி (நாளை) தியேட்டரில் வெளியிட இருப்பதாகத் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் வெளியிட்ட வெற்றிமாறன் வெளியிடும் பட அப்டேட்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
vetrimaaran presents vemal starring bose venkat directing ma.po.si movie first look released

சின்னத்திரையில் அறிமுகமாகி, அதற்கு பிறகு பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் போஸ் வெங்கட். இவர் 'கன்னி மாடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு சில சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை கைப்பற்றியது. 

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சிராஜ் தயாரிப்பில் ஒரு படம் இயக்குகிறார். 'மா.பொ.சி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் கன்னி மாடம் படத்தில் நடித்த ஸ்ரீ ராம் கார்த்திக், சாயா தேவி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சித்து குமார் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். 

vetrimaaran presents vemal starring bose venkat directing ma.po.si movie first look released

இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வெளியிடுவதாக கடந்த 1ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்போஸ்டரை சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், சமுத்திரக்னி, லால் உள்ளிட்டோர் அவரகளது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

வாத்தியார் கெட்டப்பில் விமல் நடித்துள்ளார். பள்ளிக்கூடத்தில் கல்வியை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. மேலும் போஸ்டரில் விமல் முகத்தில் ரத்தக் கறையுடன் கையில் சாக்பீஸ் உடன் இடம் பெறுகிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. 

Next Story

விமல் படக்குழுவுடன் வெற்றிமாறன் கூட்டணி

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
vetrimaaran release the vemal movie ma.po.si

போஸ் வெங்கட், பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் 'கன்னி மாடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு சில சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை கைப்பற்றியது. 

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சிராஜ் தயாரிப்பில் ஒரு படம் இயக்குகிறார். 'மா.பொ.சி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் கன்னி மாடம் படத்தில் நடித்த ஸ்ரீ ராம் கார்த்திக், சாயா தேவி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சித்து குமார் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். 

vetrimaaran release the vemal movie ma.po.si

இந்த நிலையில் இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வெளியிடுகிறது. விரைவில் படத்தின் டீசர், ட்ரைலர், மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.