நடிகர் விமலை துரத்தும் போலீஸ் 

vimal

சாய் புரொடக்ஷன்ஸ் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. விமல், ஆஷ்னா சவேரி இணைந்து நடிக்கும் இப்படத்தில் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா மற்றும் பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். புதுமுக இயக்குனர் ஏ.ஆர் முகேஷ் இயக்கியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் பேசும்போது....

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

"வெற்றிவேல் ராஜாவின் மருந்துக் கடையில் வேலை பார்க்கும் விமல், சிங்கம்புலி இருவரும் அதிகப் படியான வருமானத்திற்காக சின்ன சின்ன திருட்டுக்களை செய்பவர்கள். ஆனந்தராஜுக்கு சொந்தமான விலை மதிப்பில்லாத ஒரு கடத்தல் பொருள் ஒன்று விமல், சிங்கம்புலி கோஷ்டியிடம் மாட்டிக் கொள்ள அவர்களை ஆனந்தராஜ் குரூப் துரத்த, வழக்கு விசாரணைக்காக போலீஸ் அதிகாரி மன்சூரலிகான், பூர்ணா கோஷ்டி துரத்த, தன் கடையில் கை வைத்து விட்டார்கள் என்று அவர்களை பிடித்தே தீருவது என்று வெற்றிவேல் ராஜா குரூப் துரத்த, இப்படி படம் முழுவதும் ஒரே துரத்தல் மயம் தான். இதை கிளாமர் ஹூயூமர் என்று கலந்து கட்டி இருக்கோம்" என்றார்.

vimal
இதையும் படியுங்கள்
Subscribe