Advertisment

பிரபல வில்லன் நடிகர் கசான் கான் காலமானார்

villain actor Kazankhan passed away

Advertisment

சேதுபதி ஐபிஎஸ் படத்தில் கொடூரமான மொட்டை வில்லனாகவும், பிரியமானவளே படத்தில் ‘செவன் டைம்ஸ், செவன் டைம்ஸ்’ என தன் புஜ பலத்தைக் காட்டுகிற சிரிப்பு வில்லனாகவும் நடித்தவர் கசான்கான். தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களில் வில்லன் கதாபாத்திரமாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர்

கேரளாவைச் சேர்ந்த கசான்கான் தமிழில் சேதுபதி ஐபிஎஸ், மேட்டுக்குடி, வானத்தைப் போல, வல்லரசு, முறை மாமன், பிரியமானவளே போன்ற படங்களில் நடித்துள்ளார். சினிமாவிலிருந்து கடந்த எட்டு வருடங்களாக விலகி இருந்திருக்கிறார். இந்நிலையில் இவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்ற தகவலை பிரபல மலையாளப் படத்தயாரிப்பாளர் என்.எம். பாதுஷா வெளியிட்டுள்ளார்.

Villan Actor passed away
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe