/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pollachi_13.jpg)
காகிதப்பூக்கள் என்ற தலைப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் புதுமுகங்களான லோகன் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.
இப்படத்தை முத்து மாணிக்கம் என்பவர் இயக்கி தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங்கிற்காக பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. படக்குழுவுடன் அந்த கிராமத்திற்கும் சென்றுள்ளனர். ஆனால், கிராமத்தினர் கரோனா அச்சுறுத்தலால் படக்குழுவினரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் கூறுகையில், “படப்பிடிப்பு நடத்த விடாமல் கிராமத்தினர் தடுத்தது அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவோ பேசியும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டி கிராமத்திற்கு சென்று அனுமதி பெற்று அங்கு படப்பிடிப்பை நடத்தினோம்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)