
'என்னு நிண்டே மொய்தீன்' என்னும் க்ளாஸிக் மலையாள படத்தை இயக்கியவர் ஆர்.எஸ்.விமல். இதனைத் தொடர்ந்து 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 'மகாவீர் கர்ணா' என்ற பிரம்மாண்ட படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். இதில் கர்ணனாக விக்ரம் நடிக்கிறார். தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்திற்கு பூஜை போடப்பட்டு சிறிது காலம் ஷூட்டிங் நடைபெற்றது. அதன் பின்னர் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்' போன்ற படங்களில் நடிக்கச் சென்றார் விக்ரம். இதனால் 'மகாவீர் கர்ணா' படம் கைவிடப்பட்டது என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் ஆர்.எஸ்.விமல், சமீபத்தில் தனது அடுத்த படமான 'தர்ம ராஜ்யா' குறித்து அறிவிப்பை வெளியிட்டார். இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு விரைவில் நடைபெறும் என்றும், முக்கியக் கதாபாத்திரத்தில் முக்கியமான நட்சத்திரம் ஒருவர் நடிக்கின்றார் என்று தெரிவித்துள்ளார்.
அப்போதுதான், விக்ரம் மற்ற படங்களை முடித்த பின்னர் 'மகாவீர் கர்ணன்' படம் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.